காட்டாங்கொளத்துாரில் தபால் நிலையம் திறப்பு
மறைமலை நகர்: மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துார் - ஜி.எஸ்.டி., சாலை அருகில் எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் காட்டாங்கொளத்துார் கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையத்தில், தற்போது எஸ்.ஆர்.எம்., பல்கலை மாணவ -- மாணவியருடன் இணைந்து என்.ஜெம் என்ற நவீன தபால் நிலையம் உருவாக்கப்பட்டுள்து. நவீன கட்டமைப்புகளுடன், இணையதள வசதி, வாடிக்கையாளர்கள் படிக்க புத்தகங்கள், பண பரிவர்த்தனை, இங்கு பொருள்களை வெளியூர்களுக்கு அனுப்பும் வசதிகளுடன் அமைப்பட்டுள்ளன. இந்த தபால் நிலையத்தை சென்னை மண்டல அஞ்சல்துறை இயக்குநர் மனோஜ் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலை பதிவாளர் பொன்னுசாமி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.