/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்பாக்கம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ரூ.8 லட்சத்தில் புனரமைப்பு பணி துவக்கம்
கல்பாக்கம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ரூ.8 லட்சத்தில் புனரமைப்பு பணி துவக்கம்
கல்பாக்கம்:கல்பாக்கம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், புனரமைப்பு பணிகள் 8 லட்சம் ரூபாய் மதிப்பில், துவக்கப்பட்டு உள்ளன. கல்பாக்கம் நகரிய பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில், பிரசித்தி பெற்றது. ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், விநாயகர், முருகர், ஆஞ்சநேயர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் வீற்றுள்ளனர். ஹிந்து சமய அறநிலையத் துறையின் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் நிர்வாகம், இதை நிர்வகிக்கிறது. இக்கோவிலில் 2013ல் மஹாகும்பாபிஷேகம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. இதையடுத்து, உபயதாரர் மூலமாக, 8 லட்சம் ரூபாய் மதிப்பில், சன்னிதிகளை பராமரிக்க கடந்த மாதம் பாலாலயம் செய்து, தற்போது பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.