உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மழையால் சாய்ந்த 5 மின்கம்பங்கள் சீரமைப்பு

மழையால் சாய்ந்த 5 மின்கம்பங்கள் சீரமைப்பு

சித்தாமூர்: நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, சித்தாமூர் அடுத்த, வேலுார் கிராமத்தில் மழையில் சாய்ந்த 5 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன. சித்தாமூர் அடுத்த சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேலுார் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இங்கு 1,500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதிக்கு நுகும்பல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. 20 நாட்களுக்கு முன் மழையின் போது வயல்வெளியில் பழுதடைந்து இருந்த 5 மின்கம்பங்கள் சேதமடைந்தன, இதனால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்கம்பங்கள் சீரமைக்கப்படாமல் இருந்ததால் சம்பா பருவத்திற்கு நெல் விவசாயம் செய்ய நாற்று விடுவதற்கு நீர்ப்பாசனம் செய்ய முடியாமல் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பங்கள் அமைத்து மின்இணைப்புகளை சீரமைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ