உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உயர்மட்ட நடைமேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டுகோள்

உயர்மட்ட நடைமேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டுகோள்

வண்டலுார், வண்டலுார் ரயில் நிலையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையை பொதுமக்கள் கடந்து செல்ல, சாலையின் நடுவே உள்ள மைய தடுப்பு சுவர், பெரும் இடையூறாக இருந்து வருகிறது.தவிர, சாலையைக் கடக்கும் பொதுமக்களால், வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் இருந்து வருகிறது.எனவே, பொது மக்கள் சாலையை எளிதாக கடக்கவும், வாகன ஓட்டிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிக்கவும், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்க, கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.சாலையின் இருபக்க இணைப்பிற்கு ஏற்ப, 46 மீ., நீளம் முதல் 48 மீ., நீளம் வரை நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகளை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் துரித கதியில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென பாதசாரிகள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை