உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொத்தேரி - கோனாதி சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

பொத்தேரி - கோனாதி சாலையில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

மறைமலை நகர்:பொத்தேரி - கோனாதி சாலையிலுள்ள ரயில்வே கடவுப்பாதையில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் அடுத்த பொத்தேரி ரயில் நிலையம் அருகில், பொத்தேரி - கோனாதி சாலை உள்ளது. இந்த சாலையை, சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் பல்கலையில் படிக்கும் மாணவ -- மாணவியர், அலுவலகங்களில் வேலை செய்வோர், அதிக அளவில் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த சாலையில் பேருந்து வசதி இல்லாததால், காலை மற்றும் மாலை நேரங்களில், ரயில்வே கடவுப்பாதையை டூ - வீலரில் கடந்து செல்லும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொத்தேரி - கோனாதி சாலையில் ரயில்வே கடவுப்பாதையில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: செங்கல்பட்டு -- தாம்பரம் தடத்தில் தினமும், 60 புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் 60 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்கள் இந்த பகுதியைக் கடந்து செல்லும் போது, நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடப்படுவதால், சிரமமாக உள்ளது. இந்த ரயில்வே கேட் ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி உள்ளதால், ஜி.எஸ்.டி., சாலை வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே, இந்த பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி