செய்யூர் அரசு கலை கல்லுாரியில் அடிப்படை வசதி ஏற்படுத்த கோரிக்கை
செய்யூர்:செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவ- மாணவியருக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என, பேற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.செய்யூர் வட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கல்லுாரி துவங்க அரசாணை வெளியிடப்பட்டது. புதிய கல்லுாரி கட்டடம் அமைக்கும் வரை இந்த ஆண்டு கல்லுாரி தற்காலிகமாக செயல்பட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்லுாரி நடத்த முடிவு செய்து மே 26ம் தேதி கல்லுாரி துவங்கப்பட்டது.இந்த கல்வி ஆண்டிற்காக 5 பாடப்பிரிவுகளின் கீழ் 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று கட்டங்களாக கலந்தாய்வு நடந்து முடிந்தது. வரும் 30ம் தேதி கல்லுாரி வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. கல்லுாரி தற்போது தற்காலிகமாக செய்யூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது.கல்லுாரியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவியர் சேர்ந்துள்ளனர். ஆனால் மகளிர் கழிப்பறை, குடிநீர் வசதி இல்லை. கல்லுாரி வகுப்புகள் துவங்கும் முன் மாணவியரின் நலன்கருதி கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து கல்லுாரி முதல்வர் மாதவன் கூறியதாவது:-புதிய கல்லுாரி கட்டடம் அமைக்கும் வரை செய்யூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்க முடிவு செயல்பட்டு இயங்கி வருகிறது.கல்லுாரி வகுப்புகள் 30ம் தேதி துவங்கப்பட உள்ளன, கல்லுாரிக்கு பேருந்து, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.