மேலும் செய்திகள்
மறைமலை நகர் -- ஒரகடம் தடத்தில் மினி பஸ் அவசியம்
01-Nov-2025
மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சி, கூடலுார் பகுதியில், கோவில் நிலத்தில் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் நகராட்சி 10வது வார்டு கூடலுார் பகுதியில், 150க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தின் நடுவே, பழமையான கங்கையம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகிலுள்ள காலி இடத்தில் கழிவுநீர் தேங்கியுள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கூடலுார் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டன. இந்த பணிகள் நிறைவடையாத நிலையில், இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது, கோவிலுக்குச் சொந்தமான காலி இடத்தில் தேங்குகிறது. எனவே, கோவில் நிலத்தில் தேங்கும் கழிவுநீரை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
01-Nov-2025