உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விபத்து ஏற்படுத்தும் வகையிலுள்ள தடுப்பு சுவரை அகற்ற கோரிக்கை

விபத்து ஏற்படுத்தும் வகையிலுள்ள தடுப்பு சுவரை அகற்ற கோரிக்கை

வண்டலுார்:வண்டலுார், ஜி.எஸ்.டி., சாலையில், விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள தடுப்பு சுவரை அகற்றி, அணுகுசாலையின் அகலத்தை அதிகப்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.பெருங்களத்துாரிலிருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்லும் ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் ரயில் நிலையம் அடுத்து, ஒரு கி.மீ., தொலைவில், உயிரியல் பூங்கா சந்திப்பு உள்ளது.இந்த சந்திப்பின் இடது பக்கம், வண்டலுார் -- கேளம்பாக்கம் பிரதான சாலை துவங்குகிறது.எனவே, பெருங்களத்துார் ஜி.எஸ்.டி., சாலை வழியாக வந்து, கேளம்பாக்கம் நோக்கி பயணிக்க விரும்பும் வாகன ஓட்டிகள், உயிரியல் பூங்காவிற்கு முன், 200 மீ., துாரத்தில் உள்ள அணுகு சாலைக்கு திரும்ப வேண்டும்.சென்னை, மீஞ்சூரிலிருந்து வரும் வண்டலுார் வெளிவட்ட சாலையின் மேம்பாலம் கீழே, ஜி.எஸ்.டி., சாலையில் இந்த அணுகுசாலையின் துவக்கம் உள்ளது.இங்கு அணுகு சாலை துவங்கும் இடத்தில் உள்ள தடுப்புச் சுவர், இடையூறாக உள்ளது.இந்த தடுப்புச் சுவர், 10 அடி துாரம் ஜி.எஸ்.டி., சாலையை ஆக்கிரமித்து உள்ளதால், அணுகுசாலைக்கு எளிதாக திரும்ப வேண்டிய வாகனங்கள், வலது பக்கம் பயணித்து, பின் அணுகுசாலைக்குள் நுழைகின்றன.இதனால், புதிதாக இந்த வழித்தடத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதோடு, விபத்து அபாயத்தையும் சந்திக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அணுகுசாலையின் துவக்கத்தில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தடுப்பு சுவரை அகற்றி, சாலையின் அகலத்தை அதிகப்படுத்த வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை