உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை - பெருங்களத்துார்வரை நிழற்குடை அமைக்க கோரிக்கை

செங்கை - பெருங்களத்துார்வரை நிழற்குடை அமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு, செங்கல்பட்டு - பெருங்களத்துார்வரை, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு - பெருங்களத்துார்வரை, தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக இருந்தது. அப்போது, பரனுார், சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், காட்டங்கொளத்துார், நந்திவரம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில், சாலையின் இருபுறமும், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது.பெருங்களத்துார் - செங்கல்பட்டு பரனுார் வரை, ஆறு வழிச்சாலையில் இருந்து எட்டு வழிச்சாலையமாக மாற்றம் செய்தபோது, மேற்கண்ட இடங்களில் இருந்த, பயணியர் நிழற்குடையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அகற்றியது.பணி முடிந்தபின் பயணயர் நிழற்குடை அமைக்காமல் விட்டனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையோரங்களில், வெளியில், மழையில், பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நின்று பயணம் செய்கின்றனர்.இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை தவிர்க்க, உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், நெடுஞ்சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டும் என, அப்போதைய கலெக்டர் உத்தரவிட்டார்.தற்போது, கோடை காலம் துவங்குவதற்குள், நெடுஞ்சாலை பகுதியில், பேருந்து நிறுத்தம் பகுதியில், பயணியர் நிழற்குடை அமைக்க, கலெக்டர் அருண்ராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை