உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மானாமதி -- சந்தினாம்பட்டு சாலையை அகலப்படுத்தி சீரமைக்க கோரிக்கை

 மானாமதி -- சந்தினாம்பட்டு சாலையை அகலப்படுத்தி சீரமைக்க கோரிக்கை

திருப்போரூர்: மானாமதி - சந்தினாம்பட்டு சாலையை அகலப்படுத்தி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த மானாமதி பேருந்து நிறுத்தம் பகுதியிலிருந்து, சந்தினாம்பட்டு கிராமத்திற்குச் செல்லும் சாலை, 2 கி.மீ., துாரம் உள்ளது. மானாமதியில் பங்வேறு வணிக கடைகள், வங்கிகள், காவல் நிலையம், அரசு மருத்துவமனை, வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், அரிசி ஆலைகள் உள்ளன. சந்தினாம்பட்டு கிராமத்தில் வசிக்கும் மக்கள், அனைத்து தேவைகளுக்கும், மானாமதிக்கு வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட மானாமதி -- சந்தினாம்பட்டு சாலை குறுகியும், அதிக பள்ளங்களுடனும் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே கடந்து செல்லும் போது, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மானாமதி - சந்தினாம்பட்டு சாலையை அகலப்படுத்தி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !