உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பழுது நீக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பழுது நீக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது, மாத்துார் ஊராட்சி.இங்கு, முனியந்தாங்கல் செல்லும் சாலையோரம் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் அமைத்து, குடிநீர் சேவை துவக்கப்பட்டது.அதில், 5 ரூபாய் நாணயம் போட்டால், தானியங்கி இயந்திரம் வாயிலாக 20 லிட்டர் குடிநீர் பிடித்துக் கொள்ளலாம்.இதனால் தண்ணீர் வீணாவதும் தவிர்க்கப்பட்டது.இந்த வசதியால் பலர் பயனடைந்து வந்தனர்.மாத்துார், முனியந்தாங்கல் மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த மக்களும், இருசக்கர வாகனத்தில் சென்று, குடிநீர் கேன்கள் மற்றும் குடங்களில் தண்ணீர் பிடித்துச் சென்றனர்.விசேஷ நாட்களில் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.ஆனால், இந்த இயந்திரம் தற்போது, கடந்த சில மாதங்களாக பழுதடைந்து, பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது.இது குறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, அச்சிறுபாக்கம் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், இது குறித்து ஆய்வு செய்து, முனியந்தாங்கல் கூட்டு சாலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை பழுது நீக்கி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ