உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தவறவிட்ட பர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு

தவறவிட்ட பர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு

கூடுவாஞ்சேரி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் மணி பர்ஸ் ஒன்று கிடந்தது. அதை அப்பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் எடுத்தார். உள்ளே கருநீலம் பகுதியை சேர்ந்த, பூபதி என்பவரின் அடையாள அட்டைகளான, பான் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் இருந்தது.ராகுல், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து, ஒப்படைத்தார்.அதில் உள்ள முகவரியை கொண்டு, தவறவிட்ட நபரை அடையாளம் கண்டு, அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அவரிடம் மணி பர்ஸ் ஒப்படைக்கப்பட்டது. ராகுலை போலீசார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி