பயணியர் நிழற்குடையில் சுகாதார சீர்கேடு
மதுராந்தகம்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் ஏரிக்கரை பயணியர் நிழற்குடை, பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. சென்னையில் இருந்து திண்டிவனம் செல்லும் மார்க்கத்தில், மதுராந்தகம் ஏரிக்கரையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு பயணியர் நிழற்குடை அமைந்துள்ளது. இந்த நிழற்குடையில் மது பிரியர்கள் உணவு பொட்டலங்கள், காலி மதுபாட்டில்களை விட்டுச் செல்கின்றனர். கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. எனவே, நெடுஞ்சாலை துறையினர், பயணியர் நிழற்குடையை துாய்மைப்படுத்தி பராமரிக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.