உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வனப்பகுதியில் பாயும் கழிவுநீர்: கொளத்துாரில் பட்டுப்போன மரங்கள்

வனப்பகுதியில் பாயும் கழிவுநீர்: கொளத்துாரில் பட்டுப்போன மரங்கள்

மறைமலை நகர்,கொளத்துார் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வனப்பகுதியில் பாய்வதால், நாவல் மரங்கள் பட்டுப்போனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினமும், 520 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.இந்த குப்பை அனைத்தும், டாரஸ் லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்டு, காட்டாங்கொளத்துார் ஒன்றியம் கொளத்துார் ஊராட்சியில், சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையோரம் உள்ள, அரசு புறம்போக்கு நிலத்தில் கொட்டப்படுகின்றன. மொத்தம், 44 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரசு புறம்போக்கு நிலத்தில், 2019ம் ஆண்டு முதல் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இது தவிர, புறநகரில் உள்ள முக்கிய ஊராட்சிகளின் குப்பையும், இங்கு கொண்டு வந்து கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்கில் இருந்து மழைக்காலத்தில் வெளியேறும் கழிவுநீர், சுற்றியுள்ள கொளத்துார், ஆப்பூர், திருக்கச்சூர் வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் நேரடியாக கலக்கிறது. குப்பைக் கிடங்கைச் சுற்றி, 767 பரப்பளவில் உள்ள காப்புக் காடுகளில், வனத்துறை சார்பில் நாவல், பூவரசம், தைல மரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த வனப்பகுதியில் கழிவுநீர் தொடர்ந்து பாய்வதால், கொளத்துார் வனப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட நாவல் மரங்கள் பட்டுப்போய் உள்ளன. குப்பைக் கிடங்கு இந்த பகுதியில் அமைக்கப்பட்ட போதே, சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மரங்கள் பட்டுப்போனது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தற்போது துவக்கப்பட்டு உள்ள,'பையோ மைனிங்' பணிகளை விரைந்து முடித்து, அனைத்து குப்பையையும் அகற்ற உரி ய நடவடிக்கை வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை