உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தனியார் ஹோட்டலின் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு

தனியார் ஹோட்டலின் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம், பேருந்து முனையம் எதிரே உள்ள, தனியார் ஹோட்டலில் இருந்து தினமும் வெளியேற்றப்படும் கழிவுநீர், ஜி.எஸ்.டி., சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, அடுக்குமாடி குடியிருப்பில், 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதன் முன் பகுதியில், புஹாரி ஹோட்டல் இயங்கி வருகிறது.இந்த ஹோட்டலின் கழிவுநீர் தொட்டியில் சேகரிக்கப்படும் கழிவுநீர், இரவு 10:00 மணிக்கு மேல், ஜி.எஸ்.டி., சாலை ஓரத்தில் உள்ள மழைநீர் வடிகாலில் திறந்து விடப்படுகிறது.வடிகாலில் அடைப்பு உள்ளதால், கழிவுநீர் வெளியேறி, சாலையோரம் தேங்குவதால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வரும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே உள்ள நிறுத்தத்தில் பயணியரை இறக்கிவிட்டுச் செல்கின்றன.தவிர, கிளாம்பாக்கம் சுற்றுப் பகுதியில் வசிப்போர், தாம்பரம் நோக்கிச் செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.இந்த பேருந்து நிறுத்தம் அருகே தான், புஹாரி ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.தினமும் கழிவுநீர் வெளியேற்றப்படுவதால், தற்போது சாலையோரம், 150 அடி துாரத்திற்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.தவிர, ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தேங்கும் கழிவுநீரும், அவ்வப்போது திறந்து விடப்படுவதாக கூறப்படுகிறது.பல மாதங்களாக தேங்கி நிற்கும் கழிவுநீர், சாக்கடையாக மாறி, பாசி படர்ந்து காணப்படுகிறது. இதனால் கொசு உற்பத்தி மிகுதியாகி, இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணியர் தவிக்கின்றனர்.எனவே, சாலையில் கழிவுநீர் தேங்காதபடி, கழிவுநீர் வடிகாலில் கலக்காதபடி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ