உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிங்கபெருமாள் கோவில் சுடுகாடு முட்செடிகள் அடர்ந்து சீரழிவு

சிங்கபெருமாள் கோவில் சுடுகாடு முட்செடிகள் அடர்ந்து சீரழிவு

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராமத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் மற்றும் எரியூட்ட, அனுமந்தபுரம் சாலையில் சுடுகாடு உள்ளது.இந்த சுடுகாடு வளாகம் முழுதும் செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. மேலும், விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் உடல்களை அடக்கம் செய்யும் பொது மக்கள் மற்றும் உறவினர்கள் அவதியடைகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:அனுமந்தபுரம் சாலையில் உள்ள சுடுகாட்டில், விபத்து, தற்கொலை செய்து உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதபரிசோதனை செய்த பின் அடக்கம் செய்ய, இரவு நேரம் கடந்து விடுகிறது.சுடுகாட்டில் விளக்குகள் இல்லாததால், மதம் சார்ந்த சடங்குகள் செய்ய சிரமமாக உள்ளது. நீண்ட நாட்களாக விளக்குகள் அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகிறோம். கிராம சபை கூட்டங்களிலும் மனு அளித்து உள்ளோம்.சுடுகாடு வளாகம் முழுதும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அவற்றை அகற்றி, சுத்தமுடன் பராமரிக்க ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டோம். நடவடிக்கை இல்லை.எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இங்கு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை