உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார், கிண்டி பூங்காக்களில் பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

வண்டலுார், கிண்டி பூங்காக்களில் பார்வையாளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

தாம்பரம்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பார்வையாளர்களின் வசதிக்காக, வண்டலுார், கிண்டி பூங்காக்களில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பார்வையாளர்களுக்காக வார விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமையான, வரும் 14ம் தேதி இரு பூங்காக்களும் இயங்கும். 'ஆன்லைன்' மற்றும் 'வாட்ஸாப்' மூலம் நுழைவு கட்டண டிக்கெட் பெற புது வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கவுன்டர்களில் காத்திருக்கும் நேரம் குறைகிறது.மேலும், வண்டலுார் பூங்காவில் இருந்து 500 மீட்டர் துாரத்தில், வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில், கார், பைக், வேன் மற்றும் கனரக வாகனங்களுக்கு 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது.பார்க்கிங் பகுதியில் இருந்து பூங்காவிற்கு பார்வையாளர்களை ஏற்றி வரவும், இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் 150 போலீசார், 115 வனத்துறையினர், 50 தன்னார்வலர்கள் ஈடுபடுவர். நான்கு மருத்துவ உதவி மையம், கூடுதலாக 25 கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பூங்கா முழுதும் சுத்திகரித்த குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை