உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்

தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்

வண்டலுார்: வண்டலுாரில், தெருவில் கிடந்த தங்க மோதிரத்தை கண்டெடுத்த கல்லுாரி மாணவர், அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். வண்டலுார், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணன், 19; தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 2ம் தேதி இரவு, 8:30 மணியளவில், வண்டலுார், மேட்டு தெருவிலுள்ள தன் தந்தையின் அலுவலகத்திற்கு, நடந்து சென்றார். அப்போது, சாலையோரம் தங்க மோதிரம் கிடப்பதைப் பார்த்து, அதை எடுத்துள்ளார். பின், அந்த பகுதியில் யாரேனும் மோதிரத்தை தேடி வருகிறார்களா என காத்திருந்தார். அக்கம் பக்கத்தினரிடம், மோதிரத்தை தேடி யாரேனும் வந்தால், தன்னை தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால், அன்று இரவும், மறுநாளும் யாரும் வரவில்லை. இதனால் வண்டலுார், ஓட்டேரி காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு மோதிரத்தை ஒப்படைத்தார். மோதிரத்தின் உரிமையாளர், உரிய அடையாளம் மற்றும் ஆவணங்களை அளித்து, வண்டலுார் ஓட்டேரி காவல் நிலையத்தில், மோதிரத்தை பெற்றுக்கொள்ளலாம் என, காவல் ஆய்வாளர் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !