உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு பள்ளியில் வகுப்பறைகள் சேதம் மாணவ- மாணவியர் அச்சம்

அரசு பள்ளியில் வகுப்பறைகள் சேதம் மாணவ- மாணவியர் அச்சம்

திருக்கழுக்குன்றம், திருக்கழுக்குன்றத்தில் உள்ள பரமசிவம் நகர் பகுதியில், ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி இயங்குகிறது. அதில் 130க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர். ஐந்தாம் வகுப்பு வரை, மூன்று பழைய கட்டடங்களிலும், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, மற்றொரு புதிய கட்டடத்திலும் இயங்குகிறது. பழைய வகுப்பறை கட்டடங்களில் சில கட்டடங்களின் சுவர், மேல்தளம் கான்கிரீட் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. கடந்த செப்., 25ம் தேதி பள்ளி இயங்கி கொண்டிருந்தபோது, கட்டடத்தில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. சேதமான கட்டடங்களை பயன்படுத்துவதால், மாணவ - மாணவியர் அச்சத்துடன் செல்கின்றனர். இது ஒருபுறமிருக்க, கடந்த ஓராண்டிற்கும் மேலாக, தலைமையாசிரியர் பணியிடமும் காலியாக உள்ளது. இதுகுறித்து, அப்பகுதி வார்டு கவுன்சிலரான, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நரசிம்மன் கூறியதாவது: இந்த பள்ளியில், தலைமையாசிரியர் இல்லை. புதிய கட்டடம் கட்டுமாறு, மாவட்ட கலெக்டரிடமும், ஆதிதிராவிடர் நலத்துறையினரிடமும் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. தற்போதைய கலெக்டரிடம், மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளேன். புதிய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ