உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருப்போரூர்,திருப்போரூர் பிரணவ மலையில், கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள காலபைரவர் சுவாமிக்கு நேற்று, தேய்பிறை அஷ்டமி பூஜை, அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடந்தது. உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி