மேலும் செய்திகள்
இன்று டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப பணி தேர்வு
31-Aug-2025
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு, நாளை மறுதினம் துவங்கி நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் - டிப்ளமோ, ஐ.டி.ஐ தேர்வானது பத்து மையங்களில், 21,689 பேர் தேர்வு எழுத உள்ளனர். நாளை மறுதினம் தேதி துவங்கி, 18ம் தேதி வரையும், 22 ம் தேதி துவங்கி, 27 ம்தேதி வரையும் இரண்டு கட்டமாக நடக்கிறது. தேர்வு எழுத வரும் தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் தேர்வுக்கூடத்திற்கு வர வேண்டும். தேர்வு கூடத்திற்கு உள்ளே மொபைல்போன், மற்றும் மின்னணு கைகடிகாரம், புளு டூத் போன்ற மின்னணு பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
31-Aug-2025