உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கோகுலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லதாராம், 28; தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, 'ஹூரோ ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் வந்து கொண்டிருந்தார். சிங்கபெருமாள் கோவில் அடுத்த மெல்ரோசாபுரம் சந்திப்பில், சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத கார் மோதியதில், லதாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லதாராம் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி