மேலும் செய்திகள்
ஒயர் திருடிய மூவர் கைது
22-Sep-2024
ஒயர் திருடிய மூவர் கைது
22-Sep-2024
செங்கல்பட்டு:சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் வளையகரணை கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன், 58. இவர், பாரத் நெட்வொர்க் என்ற கேபிள் மற்றும் இணயதள நிறுவனத்தில், மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த 19ம் தேதி, அர்ஜுனன் மற்றும் ஊழியர்கள், பரனுார் ஊராட்சி அலுவலகம் அருகில், இணையதள கேபிள் ஒயர்களை பூமிக்கு அடியில் புதைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.ஊராட்சி அலுவலம் அருகிலேயே, நெர்வொர்க் கேபிள் ஒயர்கள் பண்டல், பண்டலாக வைக்கப்பட்டிருந்தன.கேபிள் ஒயர் புதைப்பதற்காக பள்ளம் தோண்டி முடித்து, ஊராட்சி அலுவலகம் வந்து பார்த்தபோது, அங்கு வைத்திருந்த கேபிள் ஒயர்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, அர்ஜுனன் அளித்த புகாரின்படி, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், கேபிள் ஒயர்களை திருடிய பரனுார் கிராமத்தை சேர்ந்த பூவரசன், 26, மோகன்குமார், 31, ஜெயபாலன், 39, ஆகியோரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
22-Sep-2024
22-Sep-2024