மேலும் செய்திகள்
வாலிபரை தாக்கிய இருவர் கைது
13-Mar-2026
மறைமலை நகர்:கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் பென்னி, 25.மறைமலை நகர் அடுத்த பொத்தேரியில் தங்கி தனியார் மருத்துவமனையில் அட்டன்டராக வேலை பார்த்து வருகிறார். ஜான் பென்னி கடந்த 26ம் தேதி இரவு பொத்தேரியில் வீட்டின் அருகில் தனது 'பஜாஜ் பல்சர்' பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்த போது பைக் காணவில்லை. மர்ம நபர்கள் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஜான் பென்னி அளித்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த அதனஞ்சேரி பகுதியை சேர்ந்த புவனேஷ்வரன்,19. அவரது நண்பரான 17 வயது சிறார் இருவரும் பைக் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இருவரையும் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.
13-Mar-2026