உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சித்தாமூரில் பூங்கா அமைக்க வலியுறுத்தல்

சித்தாமூரில் பூங்கா அமைக்க வலியுறுத்தல்

சித்தாமூர்:சித்தாமூர் சாலை சந்திப்பில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.சித்தாமூர் சாலை சந்திப்பு அருகே, 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய குளம் உள்ளது. நாளடைவில் குளம் பராமரிப்பு இல்லாமல் குப்பை தேங்கி, அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்து வருகிறது. இதனால், குளத்து நீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரியில், குளத்தின் இரண்டு கரையிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சித்தாமூர் பகுதியில் பூங்கா வசதி இல்லாததால், பொதுமக்கள் செய்யூர் - போளூர் சாலையில் நடைபயிற்சி செய்து வருகின்றனர். மேலும், குழந்தைகள் விளையாட பூங்கா இல்லாமல் சிரமப்படுகின்றனர்.எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் குளத்தை சுற்றி நடைபாதை மற்றும் காலி இடத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை