உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லையில் களைகட்டும் சுற்றுலா

மாமல்லையில் களைகட்டும் சுற்றுலா

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சர்வதேச பயணியர் குழுவினராக வர துவங்கியுள்ளனர். மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா இடமாக விளங்குகிறது. இங்குள்ள பல்லவர் கால கலைச்சிற்பங்களை, உள்நாடு, சர்வதேச பயணியர் கண்டு ரசிக்கின்றனர். சர்வதேச பயணியரை பொறுத்தவரை, ஆண்டு இறுதியில் அக்டோபர் முதல் மார்ச் வரை குவிகின்றனர். பிரதமர் மோடி - சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், இங்கு கடந்த 2019ல் சந்தித்த நிகழ்வைத் தொடர்ந்து, சர்வதேச பயணியர் படையெடுக்கின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கடுங்குளிர் நிலவும் ஆண்டு இறுதியில், அப்பகுதியினர் இயல்பான தட்பவெப்ப சூழல் கருதி, இந்திய சுற்றுலா மேற்கொள்வர். தற்போது இப்பயணியர் சுற்றுலா சீசன் துவங்கி, வருகின்றனர். தனி பயணியர், குழுவினர் என குவிந்து, சுற்றுலா களைகட்டுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை