உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வந்தவாசி - கிளாம்பாக்கம் பேருந்து மதுராந்தகம் நிலையத்திற்குள் வருமா?

வந்தவாசி - கிளாம்பாக்கம் பேருந்து மதுராந்தகம் நிலையத்திற்குள் வருமா?

மதுராந்தகம்:வந்தவாசியில் இருந்து சோத்துப்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை செல்லும் தடம் எண்: '206டி' பேருந்து, மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து, தடம் எண்: '206டி' பேருந்து மருதாடு, ராமாபுரம், சோத்துப்பாக்கம் வழியாக சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை அடைகிறது. பின், மதுராந்தகம் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் வழியாக செங்கல்பட்டு, கிளாம்பாக்கம் வரை செல்கிறது. இந்த பேருந்து, மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல், மதுராந்தகம் ஏரிக்கரை புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்திலேயே பயணியரை இறக்கிவிட்டுச் செல்கிறது. இதனால், வந்தவாசியில் இருந்து இந்த பேருந்தில், பல்வேறு பணிகளுக்காக மதுராந்தகம் செல்லும் பயணியர், ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மதுராந்தகம் நகர பகுதிக்கு நடந்து செல்கின்றனர். இதன் காரணமாக முதியோர் மற்றும் பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே, வந்தவாசியில் இருந்து செல்லும் பேருந்து, மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திற்குள் சென்று, அதன் பின் கிளாம்பாக்கம் வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி