உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலைநகரில் நடைமேம்பாலம் இரும்பு துாண் பொருத்தும் பணி துவக்கம்

மறைமலைநகரில் நடைமேம்பாலம் இரும்பு துாண் பொருத்தும் பணி துவக்கம்

மறைமலைநகர்:மறைமலைநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைமேம்பாலம் அமைக்க, இரும்பு துாண்கள் பொருத்தும் பணி துவங்கி உள்ளது.திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இது, தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை.இந்த சாலையில் பெருங்களத்துார் முதல்‍- செட்டிப்புண்ணியம் வரை எட்டுவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.இதனால், சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையைக் கடக்கும் பாதசாரிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.இந்த பகுதிகளில் நடைமேம்பாலம் அமைக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகத்திடம் பயணியர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில், மறைமலைநகர் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையின் குறுக்கே நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள், கடந்த ஆண்டு துவக்கப்பட்டன.முதலில் வேகமாக நடந்த பணிகள், அதன் பின் மந்தமாக நடைபெற்றன. பணிகளை வேகமாக முடிக்க வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, மீண்டும் பணிகள் வேகமெடுத்து உள்ளன. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தற்போது, நடைமேம்பாலத்திற்கு துாண்கள் பொருத்தும் பணியை துவக்கி உள்ளனர். பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, நடைமேம்பாலம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ