பொது ராணுவ பயிற்சி மையத்தில் நுழைந்த வாலிபர் கைது
பரங்கிமலை:சென்னை, பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் உள்ளது. இங்கு, ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்பதால், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ராணுவ அதிகாரிகளின் உணவகப் பகுதியில் ஒரு இளைஞர் சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்ததை கண்ட ராணுவ வீரர்கள், அவரை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மொனுஜ் தாஸ், 28, என தெரியவந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் அசாமில் இருந்து ரயிலில் சென்னை வந்துள்ளார். பல்வேறு இடங்களில் சுற்றிய அவர், பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் உணவக வளாகத்திற்குள் நுழைந்துள்ளார்.ராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பை மீறி வாலிபர் வந்தது குறித்து விசாரித்த பின், ராணுவ அதிகாரிகள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.