உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை விபத்தில் வாலிபர் பலி

சாலை விபத்தில் வாலிபர் பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். சென்னை ஆலந்துார் வ.ஊ.சி., நகரை சேர்ந்தவர் ராஜா, 39. கடந்த 2ம் தேதி சென்னையில் இருந்து மதுராந்தகம் நோக்கி ஜி.எஸ்.டி., சாலையில் தனது 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்றார். செங்கல்பட்டு பச்சையம்மன் கோவில் சந்திப்பு அருகில் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ராஜா படுகாயமடைந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு பொத்தேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ராஜா நேற்று உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை