உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 145 போன்கள் குன்றத்துாரில் பறிமுதல்

145 போன்கள் குன்றத்துாரில் பறிமுதல்

குன்றத்துார்,குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில், குன்றத்துார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரே பைக்கில் வந்த மூவரை மடக்கி விசாரித்தனர். அவர்கள், ஆந்திராவைச் சேர்ந்த மஞ்சுநாத், 30, வினய்குமார், 20, ராஜேஷ், 31, என்பது தெரிய வந்தது.அவர்களின் பதில் முரண்பாடாக இருக்கவே, உடைமைகளை சோதனை செய்தனர். இதில், பயன்படுத்தப்பட்ட 145 மொபைல் போன்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவை, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்வதாக பிடிபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.பறிமுதல் செய்யப்பட்ட 145 மொபைல் போன்களையும் பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ