உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணியை விட்டு நிறுத்தியதால் மேலாளரை கொன்ற 5 பேர் கைது

பணியை விட்டு நிறுத்தியதால் மேலாளரை கொன்ற 5 பேர் கைது

மணலிபுதுநகர்:ஆந்திர மாநிலம், கூடூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய் பிரசாத், 45. இவர், மணலிபுதுநகர் அடுத்த வெள்ளிவாயலில் செயல்படும், 'கமல் என்டர்பிரைசஸ்' கன்டெய்னர் யார்டில் மேலாளராக பணிபுரிந்தார்.அதே நிறுவனத்தில், ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தவர் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி, 25. கடந்த 6ம் தேதி, பணி நேரம் முடிவதற்கு முன்பாகவே, பாலாஜி வெளியே சென்றதாக தெரிகிறது.இது குறித்து, 8ம் தேதி மாலை, பாலாஜியிடம் மேலாளர் சாய்பிரசாத் விசாரித்தார். அப்போது, தகராறு ஏற்பட்டுள்ளது. பின், பாலாஜியை பணிக்கு வர வேண்டாம் என, மேலாளர் கூறிவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, மீண்டும் நேற்று முன்தினம் அதிகாலை, சாய்பிரசாத்தை பார்க்க பாலாஜி அங்கு சென்றுள்ளார். அப்போது, இருவரிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.பின், நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தன் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து, சாய்பிரசாத்தை சுத்தியல் மற்றும் இரும்பு ராடால் அடித்து கொலை செய்து தப்பினர்.மணலிபுதுநகர் போலீசார், சாய் பிரசாத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து, கொலையாளிகளின் மொபைல் போன் சிக்னலை கண்காணித்த தனிப்படை போலீசார், பாரிமுனை அருகே சுற்றித் திரிந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி, 25, முகிலன், 21, நாப்பாளையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி, 22, ஷியாம், 20, கொருக்குபேட்டையைச் சேர்ந்த மணிமாறன், 20, ஆகிய ஐந்து பேரை, நேற்று காலை கைது செய்தனர்.விசாரணையில், வேலையை விட்டு நிறுத்திய ஆத்திரத்தில், சுத்தியலால் அடித்துக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.விசாரணைக்கு பின், ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ