மேலும் செய்திகள்
தேஜஸ் உட்பட 9 ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்
03-Jun-2026
2 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
13-May-2026
சென்னை, ஜூன் 13– கர்நாடகா மாநிலம், கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் நிலையத்தில், பணிமனை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், சென்னை சென்ட்ரல் – பெங்களூரு உட்பட ஒன்பது விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: * கே.எஸ்.ஆர்., பெங்களூரு – சென்ட்ரல் ரயில் வரும் ஆக., 1லும், சென்ட்ரல் – கே.எஸ்.ஆர்., பெங்களூரு ரயில் வரும் ஆக.,2லும் ரத்து செய்யப்படும் * சென்ட்ரல் – கர்நாடகா மாநிலம் அசோகபுரம் ரயில் வரும் ஆக.,. 2ம், அசாகபுரம் – சென்ட்ரல் ரயில் வரும் ஆக., 3லும் ரத்து செய்யப்படும் * ஜோலார்பேட்டை – பெங்களூரு ரயில் வரும் 16 முதல் 19ம் தேதி வரை, பெங்களூரு கன்டோன்மெண்ட் வரை இயக்கப்படும் * சென்ட்ரல் – கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் வரும் ஜூலை 31, ஆக., 1ல் மாற்றுப்பாதையில் செல்வதால், கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும் * கே.எஸ்.ஆர் பெங்களூரு – சென்ட்ரல் விரைவு ரயில் வரும் ஜூலை 31, ஆக., 2, 3ம் தேதிகளில் எஸ்.எம்.வி.டி., பெங்களூருவில் இருந்து இயக்கப்படும் * சென்ட்ரல் – கே.எஸ்.ஆர். பெங்களூரு லால் பாக் ரயில் வரும் ஜூலை 31 முதல் ஆக., 3 எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வழியாக இயக்கப்படும் * கே.எஸ்.ஆர்., பெங்களூரு – ஜோலார்பேட்டை ரயில் வரும் ஆக.,1, முதல் 4ம் தேதி வரை பெங்களூரு கன்டோன்மெண்ட்டில் இருந்து இயக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
03-Jun-2026
13-May-2026