உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏ டிவி ஷ ன் வாலிபால்: ஐ.சி.எப்., அணி வெற்றி

ஏ டிவி ஷ ன் வாலிபால்: ஐ.சி.எப்., அணி வெற்றி

சென்னை, சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில், 'ஏ' டிவிசன் வாலிபால் லீக் சாம்பியன்ஷிப் போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் துவங்கியது.இதில், நடப்பு சாம்பியனான எஸ்.ஆர்.எம்., பல்கலை, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, டி.ஜி.வைஷ்ணவ், வருமான வரி, ஐ.சி.எப்., எஸ்.ஆர்.எம்., அகாடமி, ஜி.எஸ்.டி., ஆகிய எட்டு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டிகள் 'ரவுண்ட் ராபின்' முறையில் நடக்கின்றன.நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில், ஐ.சி.எப்., மற்றும் ஜி.எஸ்.டி., அணிகள் மோதின. இதில், 3 - 2 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப்., அணி வெற்றி பெற்றது.மற்றொரு ஆட்டத்தில், ஐ.ஓ.பி., வங்கி 3 - 0 என்ற செட் கணக்கில் எஸ்.ஆர்.எம்., அகாடமியை தோற்கடித்தது. இன்று மாலை நடக்கும் ஆட்டத்தில், டி.ஜி.வைஷ்ணவ் - ஐ.சி.எப்., மற்றும் இந்தியன் வங்கி - வருமான வரி அணிகள் எதிர்கொள்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ