உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளைஞர் மூவருக்கு அரிவாள் வெட்டு

இளைஞர் மூவருக்கு அரிவாள் வெட்டு

படப்பை, படப்பை அடுத்த, ஒரத்துார் சின்ன தெரு பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், 23, விக்னேஷ், 28, விஜயகுமார், 33, ஆகிய மூவரும், நேற்று முன்தினம் இரவு, ஒரே வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கும்பல், மூவரையும் கத்தியால் வெட்டி, தப்பிச் சென்றது. மணிமங்கலம் போலீசார் விசாரணையில் நிலம், விற்பனை செய்வதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, அதே பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி, 25, ஸ்ரீதர், 24, உள்ளிட்டோர் இணைந்து ஆகாஷ், விக்னேஷ், விஜகுமாரை வெட்டியது தெரிய வந்தது. இதையடுத்து விநாயகமூர்த்தி, ஸ்ரீதர் ஆகிய இருவரை, போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை