உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ, பைக் திருடன் கைது

ஆட்டோ, பைக் திருடன் கைது

பள்ளிக்கரணை:பள்ளிக்கரணை, ஆதிமூலம் நகரைச் சேர்ந்தவர் ஜெயவேலு, 44; ஆட்டோ ஓட்டுனர். கடந்த 22ல் ஓம் சக்தி நகரில், தன் ஆட்டோவை நிறுத்தி, அருகில் இருந்த கடையில் டீ குடித்து திரும்பியபோது, ஆட்டோவை காணவில்லை.இதுகுறித்த புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார், 'சிசிடிவி' பதிவுகளை வைத்து விசாரித்தனர்.அதில் பள்ளிக்கரணை, துளுக்காணத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ், 39, என்பவர், ஆட்டோவை திருடியது தெரியவந்தது.அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது, அதே பகுதியில் ஒரு வீட்டில் இருசக்கர வாகனத்தை திருடியதாகவும் தெரிவித்தார்.அவரை கைது செய்த போலீசார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தை மீட்டனர். ஆலந்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !