மேலும் செய்திகள்
கல்வியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு
14-Sep-2026
ஆர்.எம்.கே., பொறியியல் கல்லுாரியில், 2026 – 27ம் கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகளின் தொடக்க விழா கல்விக்குழும நிறுவனர் முனிரத்தினம் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. சிறப்பு விருந்தினரான கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, மாணவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் சிறப்பு பரிசு வழங்கி வரவேற்றார். விழாவில், ஆர்.எம்.கே., குழும இயக்குநர் ஜோதி நாயுடு, கல்லுாரி முதல்வர் முகமது ஜுனத், துணைத்தலைவர் கிஷோர், செயலர் யலமஞ்சி பிரதீப், ஆலோசகர்களான தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை முன்னாள் துணைவேந்தர் பழனிசாமி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பிச்சாண்டி, தமிழ்நாடு மினரல்ஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் மனோகரன், டாக்டர்கள் சிவஞான பிரபு, மணிவண்ணன், பாவை மாதேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடம்: கல்லுாரி வளாகம், கவரைப்பேட்டை, திருவள்ளூர்.
14-Sep-2026