உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓ.எம்.ஆரில் துாங்கும் குடிமகன்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஓ.எம்.ஆரில் துாங்கும் குடிமகன்கள் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்

சோழிங்கநல்லுார், ஓ.எம்.ஆரில், ஐ.டி., நிறுவனங்கள் அதிகளவில் உள்ளதால், சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆறு வழியான இந்த சாலையில், மெட்ரோ ரயில் பணிக்காக, இருவழி சாலை அடைக்கப்பட்டது.அதனால், சாலையின் அகலம் குறைந்தது. ஓ.எம்.ஆரில் உள்ள டாஸ்மாக் பார்களில், இரவு 10:00 மணி முதல் மறுநாள் நண்பகல் 12:00 மணி வரை, சட்டவிரோதமாக மது விற்கப்படுகிறது. இதனால், காலையில் வேலைக்கு செல்லாமல் மது குடிப்போர் அதிகரித்துள்ளனர். அளவுக்கு மீறி மது குடித்து மயங்கி விழுந்தால், அவர்களை பார் ஊழியர்கள் துாக்கி சாலையோரம் படுக்க வைக்கின்றனர்.சில நிமிடங்களில், உருண்டு வாகனங்களுக்கு இடையூறாக துாங்குகின்றனர். இதே போல், தினமும் ஒன்று, இரண்டு பேர் சாலையில் விழுந்து, வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.விழுந்து கிடப்பது தெரியாமல், அவர்களின் கை, கால்களில் வாகனங்கள் ஏறினால், சக 'குடி'மகன்கள் சேர்ந்து, வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.இதனால், டாஸ்மார்க் பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டியுள்ளது.அதீத போதையில், நடந்து செல்லும் பெண்களிடம் சில்மிஷம் செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. போதை நபர்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து, போலீசாரிடம் புகார் அளித்தால், அவர்கள் கண்டுகொள்வதில்லை என, அடிக்கடி புகார் எழுகிறது.அதிக வாகனங்கள் செல்லும் சாலையானதால், போதை நபர்களால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, காவல் உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை