மேலும் செய்திகள்
சைபர் வழக்கு 10 பேர் கைது ரூ.42.72 லட்சம் மீட்பு
1 hour(s) ago
மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
2 hour(s) ago
ரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
முடிச்சூர், தாம்பரம் - முடிச்சூர் சாலை, பார்வதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே, ராஜேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான, 'கோகுல் ஹார்டுவேர்ஸ்' கடை உள்ளது.நேற்று மதியம், இந்த கடையின் முதல் தளத்தில் இருந்து, திடீரென புகை வெளியேறியது. இதைப் பார்த்து கவனித்த கடை ஊழியர்கள், சுதாரித்து வெளியேறினர்.சற்று நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. கடையில் பெயின்ட் டப்பா, பைப் என பிளாஸ்டிக் பொருட்களில் மளமளவென தீ பரவியது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீயில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.இச்சம்பவத்தால், அச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பீர்க்கன்காரணை போலீசார், தீ விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago