உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 16 வயது சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு ஆயுள்

16 வயது சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு ஆயுள்

எண்ணுார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 28, இவர், 2019ல் எண்ணுாரில் தங்கி வேலை பார்த்தபோது, மனைவியின் தங்கையான, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனால் சிறுமி, ஆறு மாதம் கர்ப்பமானார். இதுகுறித்து எண்ணுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து, ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த விசாரணை, திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஒன்பது சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில், ராஜ்குமாருக்கு அதிகபட்ச தண்டனையாக, வாழ்நாள் ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டது.அபராத தொகையை கட்ட தவறினால், கூடுதலாக மூன்று ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட பின் ராஜ்குமார், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ