உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடிகால் பள்ளத்தில் விழுந்து சிறுமி காயம்

வடிகால் பள்ளத்தில் விழுந்து சிறுமி காயம்

துரைப்பாக்கம், பெருங்குடி, சீவரம் மாருதி நகர் இரண்டாவது பிரதான சாலையை சேர்ந்தவர் உதயன், 30. மனைவி மீனா, 25. இவர்களுக்கு யோகா பிரதிக் ஷா, 3, என்ற மகள் உள்ளார்.வீட்டு முன் மழைநீர் வடிகால் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், தடுப்பு அமைக்கவில்லை.நேற்று முன்தினம் இரவு, வீட்டு முன் நின்றிருந்த யோக பிரதிக் ஷா, எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் விழுந்தார்.இதில் பலத்த காயமடைந்த குழந்தைக்கு, சோழிங்கநல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, துரைப்பாக்கம் போலீசார், பணி செய்த ஒப்பந்த நிறுவனத்திடம் விசாரிக்கின்றனர்.சிறுமியின் தாய் மீனாட்சி கூறியதாவது:குடியிருப்பு பகுதி என தெரிந்தும், பள்ளம் தோண்டிய பின் எச்சரிக்கை தடுப்பு அமைக்காமல் அப்படியே விட்டு சென்றனர்.தடுப்பு அமைத்திருந்தால், இந்த விபத்து நடந்திருக்காது. இதுபோன்ற சம்பவம் வேறு எங்கும் நடைபெறாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி