சாலை ஆக்கிரமிக்கும் கனரக வாகனங்கள்
பல்லாவரம், பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில், ஈச்சங்காடு சந்திப்பில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் இடத்தில், சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் நெரிசல் ஏற்படுகிறது.பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், ஈச்சங்காடு சந்திப்பில் இருந்து பல்லாவரம் நோக்கி வரும் இடத்தில், சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்துவது தொடர்கிறது. குறிப்பாக, லாரிகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், அந்த இடத்தில் 'பீக் ஹவர்' வேளைகளில் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார், கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுத்து, நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.