பள்ளி ஹாக்கி லீக் துவக்கம்
சென்னை, தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான மாநில ஹாக்கி லீக் போட்டி, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் இன்று துவங்க உள்ளது.இதற்கு முன்னாக, மாநிலம் முழுதும் அந்தந்த மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. 50க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் உட்பட ஏராளமான பள்ளி அணிகள் பங்கேற்றன.இப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி அணிகள், இன்று துவங்க உள்ள மாநில போட்டியில் பங்கேற்கின்றன.இதில், மதுரை, சென்னை மண்டலம் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. மேற்கண்ட அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டு, 'லீக்' முறையில் மோத உள்ளன. போட்டிகள் தொடர்ந்து, 3ம் தேதி வரை நடக்க உள்ளது என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்.