உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் கண்ணாடி உடைத்த வாலிபருக்கு காப்பு

கார் கண்ணாடி உடைத்த வாலிபருக்கு காப்பு

அயனாவரம்,:தலைமை செயலக குடியிருப்பு, ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார், 56. இவர், கடந்த 21ம் தேதி இரவு, அயனாவரம் -- கொன்னுார் நெடுஞ்சாலையில், சங்கரபக்தன் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவருக்கு பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர், சிவகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த அந்த நபர், சிவகுமாரின் கார் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பினார். இது குறித்து, தலைமை செயலக குடியிருப்பு போலீசில், சிவகுமார் புகார் அளித்தார்.அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.அதில், கார் கண்ணாடியை உடைத்தது, வில்லிவாக்கம், வடக்கு ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ், 23, என தெரிந்தது.போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ