உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 10 பேருக்கு குண்டாஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 10 பேருக்கு குண்டாஸ்

சென்னை, பகுஜன் சமாஜ் கட்சியின், தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கில், ரவுடிகள், வழக்கறிஞர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதில், முக்கிய குற்றவாளிகளான ராணிப்பேட்டையைச் சேர்ந்த பொன்னை பாலு, 39, சந்தோஷ், 22, கோகுல், 25, விஜய், 24; திருநின்றவூரைச் சேர்ந்தவர்கள் ராமு, 38, அருள், 32, செல்வராஜ், 49, ஆகியோர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், புளியந்தோப்பு திருமலை, 45, ஆர்.கே.பேட்டை மணிவண்ணன், 25, கள்ளிப்பட்டுடைச் சேர்ந்த சிவசக்தி, 26, ஆகிய 10 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ