டீக்கடை உரிமையாளரை மிரட்டியவர் கைது
அயனாவரம், டீ கடையில் உரிமையாளிடம் கத்தியை காட்டி மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். அயனாவரம் பாளையக்காரன் தெருவை சேர்ந்தவர், நந்தகுமார், 58. இவர் டீ கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இவரது கடைக்கு வந்த நபர், டீ குடித்து விட்டு பணம் கொடுக்காமல் சென்றார். நந்தகுமார் அந்த நபரிடம் பணம் கேட்ட போது, அந்த நபர் உருட்டு கட்டையால் நந்தகுமாரை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி சென்றார்.இதுகுறித்த புகாரின்படி விசாரித்த அயனாவரம் போலீசார், அயனாவரம் மதுரை தெருவை சேர்ந்த மதன்குமார், 36, என்பவரை கைது செய்தனர். மதன்குமார் மீது 8 குற்ற வழக்குகள் உள்ளன.