உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சந்தை கழிப்பறைகள் இனி இலவசம்

சந்தை கழிப்பறைகள் இனி இலவசம்

கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில், 68 கழிப்பறைகள் உள்ளன. இவற்றில் 23 மகளிருக்கானவை. இந்த கழிப்பறைகள், அங்காடி நிர்வாக குழு சார்பில் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. உபாதை கழிக்க 5 முதல் 10 ரூபாயும், குளிக்க 30 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது.இந்த கழிப்பறைகளை இலவசமாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அதன்படி, நேற்று முதல், கோயம்பேடு சந்தை வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் இலவசம் என, அங்காடி நிர்வாக குழு அறிவித்துள்ளது.மேலும், கோயம்பேடு சந்தை வளாகத்தை சுற்றியுள்ள சாலையோரங்களில் 10க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டவும், அக்குழு முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி