உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி ஐ.ஐ.டி., வாயிலில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

கிண்டி ஐ.ஐ.டி., வாயிலில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

சென்னை, சென்னை, கிண்டி ஐ.ஐ.டி., வளாகத்தில் வனவாணி மற்றும் கேந்திரா வித்யாலயா ஆகிய பள்ளிகளில், 4,000 மாணவர்கள் படிக்கின்றனர்.இவர்களை அழைத்துச் செல்ல, பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும்.இந்த ஆண்டு, 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. ஆனால், 6 முதல் பிளஸ் 2 பயிலும் மாணவர்களை அழைத்து செல்ல வழங்கப்படவில்லை.மாறாக, ஐ.ஐ.டி., நுழைவாயிலில் நிற்கும் பள்ளி வாகனத்தில் செல்ல வேண்டுமென, பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், ஐ.ஐ.டி.,யின் கோட்டூர்புரம், வேளச்சேரி காந்தி சாலை மற்றும் தரமணி ஆகிய மூன்று நுழைவாயிலில் நின்று, நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.போலீசார், பெற்றோர், பள்ளி நிர்வாகம் பேச்சு நடத்தியது. நிர்வாக குழுவில் பேசி, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அனுமதி சீட்டு வழங்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக, பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ