பூந்தமல்லி - போரூர் கடைசி மெட்ரோ மேம்பாலம் இணைப்பு
சென்னை, மார்ச் 9- சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வழித்தடத்தில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நடந்து வருகிறது.இதில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியான போரூர் - பூந்தமல்லி வரையிலான மேம்பால பாதை குமணன்சாவடியில், கடைசி பால கட்டுமானப் பணி, நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்வின்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன், தலைமை பொதுமேலாளர்கள் அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.இத்திட்டத்தின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய பல்வேறு பெண் பொறியாளர்கள், உலக மகளிர் தினத்தையொட்டி கவுரவிக்கப்பட்டனர்.மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'பூந்தமல்லி - போரூர் சந்திப்பு வரையிலான மேம்பால வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில், இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை துவங்கும்' என்றனர்.