ரயில் நிலைய லிப்ட் சீரமைப்பு
சென்னை:சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனும் நகரும் படிக்கட்டு, 'லிப்ட்'களின் சேவை முடங்கி இருப்பதால், பயணியர் கடும் அவதிப்பட்டு வந்தனர்.இது தொடர்பாக, கடந்த 2ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நகரும் படிக்கட்டு மற்றும் லிப்ட்கள் சீரமைக்கப்பட்டன. இதனால், பயணியர் நிம்மதியடைந்துள்ளனர். அதேபோல், இந்த தடத்தில் கூடுதல் மின்சார ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.